மோடி படத்துடன் வாக்கு கேட்டவர் கொலை

மோடி படத்துடன் வாக்கு கேட்டவர் கொலை

2 mins read

ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடி யின் படத்தை கழுத்தில் மாட்டிய வாறு வாக்கு கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 75, (படம்). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலு வலக ஊழியராக வேலை செய்த அவர் தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக தனியாக வசித்து வந்தார். பாரதிய ஜனதா கட்சி உறுப் பினராக இல்லாவிட்டாலும் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவர். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார். அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களிக் குமாறு வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ ரின் படங்களை கழுத்தில் மாட்டிக் கொண்டு கோவிந்தராஜ் பிரசாரம் செய்தார். அப்போது அங்கிருந்த கடைக் காரர்களிடமும் வாடிக்கையாளர் களிடமும் வாக்குச் சேகரித்தார். அப்போது அங்கிருந்த கோபிநாத் என்னும் பேருந்து ஓட்டுநர் முதியவ ருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் வாக்குவாதம் முற்றி யதில் ஆத்திரம் அடைந்த கோபி நாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறிய அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது அக்கம்பக்கத்தினர் கோவிந்த ராஜை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார் கோபிநாத்தை கைது செய்தனர். விசாரணை தொடருகிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி ஏதும் உள்ளதா என் றும் கோபிநாத் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.