சேலம்: நீதிமன்றம் தடை போட் டாலும் விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறை வேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி (படம்) கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை-சேலம் இடையே யான எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம் பியது. பல கட்ட போராட்டங்களை நடத்திய விவசாயிகள் நீதிமன்றத் திலும் வழக்குத் தொடர்ந்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் இந்தத் திட் டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் ததுடன் அக்கட்சியின் இளை ஞரணித் தலைவர் அன்புமணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பில், இந்தத் திட்டத்தையே ரத்து செய்தது. விவசாயிகளிடம் கைப்பற்றப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடி காட்டினர். இந்தத் தீர்ப்பால் 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந் தனர். இந்தத் தீர்ப்புக்கு தாங்கள் போட்ட வழக்கு தான் காரணம் என்று பாமகவும் உரிமை கொண்டா டியது. ஆனால் அதிமுக அரசோ, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில்தான் சேலத்தில் நேற்று நடந்த அதிமுக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் வர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். நிதின் கட்காரி பேசுகையில், "தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை போட்டிருந்தாலும் விவசாயிகளுடன் கலந்து பேசி அத்திட்டத்தை நிறைவேற்றுவோம். "விவசாயிகளுக்கு கூடுதலாக பணம் கொடுத்தாவது இத்திட்டம் நிறைவேற்றப்படும். விரைவில் எல்லாப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்படும்," என்று நிதின் கட் காரி பேசியது சேலம் பகுதி விவ சாயிகளை மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. உயர் நீதிமன்றம் ரத்து செய்த சேலம் எட்டு வழிச்சாலைத் திட் டத்தை, விவசாயிகளுக்கு கூடு தலாக பணம் கொடுத்தாவது நிறைவேற்றுவோம் என்ற நிதின் கட்காரியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எட்டு வழிச்சாலை: கட்காரி பேச்சால் அரசியல் அதிர்ச்சி
2 mins read

