விஷவாயு தாக்கி நான்கு இளையர்கள் மரணம்

விஷவாயு தாக்கி நான்கு இளையர்கள் மரணம்

1 mins read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதி யில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த அந்த நான்கு இளையர்களும் பரி தாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை தமி ழகத்தில் அதிகரித்து வருகி றது.