இணையத்தள இளையர்களிடம் இமாலய சக்தி:12.12 லட்சம் பேர் மீது கட்சிகள் குறி

இணையத்தள இளையர்களிடம் இமாலய சக்தி:12.12 லட்சம் பேர் மீது கட்சிகள் குறி

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் 18 முதல் 19 வரை வயதுள்ள சுமார் 12.12 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதல்தடவை யாக வாக்களிக்க உள்ளனர். அவர்கள் இணையப் புழங்கி கள் என்பதால் அரசியல் கட்சிகள் அந்த இளைஞர்களின் வாக்கு களைக் கவர சமூக வலைத்தளங் களில் புதுப்புது வியூகங்களை அரங்கேற்றி வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஏறக்குறைய 25,000 இணைய இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாகவும் திகழ்கிறார்கள். ஆகையால் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இத்தகைய இணையப் புழங்கி களைக் கவர தீவிர பிரசாரத்தை அன்றாடம் பதிவேற்றிவருகின்றன. இதில் திமுக, அதிமுக கட்சி கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னணியில் இருக்கின்றன. இவை இரண்டும் தங்களுக்கு ஆதரவான காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் ஏராள மாகப் பதிவேற்றுகின்றன. அத்தகைய காணொளிகளைப் பார்த்து இளையர்கள் மனம் மாறு வார்கள் என்றும் முதல்தடவையாக வாக்களிக்க இருக்கும் அவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்றும் அரசியல் கட்சிகள் நம்புகின்றன. தமிழகத்தில் 2.95 கோடி ஆண்கள், 3.02 பெண்கள், 5,790 திருநங்கையர் முதலானோர் உட்பட மொத்தம் 5.98 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தத்தில் ஆண்களைவிட பெண்கள் 6.74 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். வாக்காளர் களில் முதல்தடவையாக வாக் களிக்கப்போகும் 12.12 லட்சம் இளையர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல வழிகளிலும் காய் களை நகர்த்துகின்றன.