கரகாட்டக்காரன் பாணியில் செந்தில் பிரசாரம்: சொப்பன சுந்தரி அதிமுக யாரிடம் என கேள்வி

கரகாட்டக்காரன் பாணியில் செந்தில் பிரசாரம்: சொப்பன சுந்தரி அதிமுக யாரிடம் என கேள்வி

2 mins read
f26a0c39-fcd1-4fce-912f-a202df3c0efe
-

சென்னை: ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவின் பிரசார பீரங்கியாக, கட்சியின் நங்கூரமாகத் திகழ்ந்த சிரிப்பு நடிகர் செந்தில் (கோப்புப்படம்) ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக கட்சியைக் கைவிட்டுவிட்டார். அமமுக கட்சியில் சேர்ந்துவிட்ட செந்தில், எதிர்க்கட்சிகளைவிட காரசாரமாக அதிமுகவை குறை கூறி வருகிறார். செந்தில், பல தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்களை ஆத ரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மானாமதுரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து பிரசாரம் செய்த செந்தில், இப்போதைய அதிமுகவை கரகாட் டக்காரன் படத்தில் வரும் நகைச் சுவை காட்சி ஒன்றுடன் ஒப்பிட்டு அந்தக் கட்சியை 'சொப்பன சுந்தரி' என்று வர்ணித்தார். பிரபலமான பழைய கார் ஒன்றை வைத்திருந்த சொப்பன சுந்தரியை இப்போது யார் வைத்து இருக்கிறார்கள் என்று ஒரு சிரிப்பு வசனம் 'கரகாட்டக்காரன்' படத் தில் இடம்பெற்றிருந்தது. அந்த வசனத்தைக் குறிப்பிட்டு பேசிய செந்தில், இப்போது சொப்பன சுந்தரியைப் போல அதிமுகவை வைத்திருப்பது பன்னீர் செல்வமா, பழனிசாமியா அல்லது மோடியா என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா அரசியலில் யார் யாரை ஒதுக்கி இருந்தாரோ அவர்களுடன் அதிமுக இப்போது கூட்டு சேர்ந்து இருப்பதை அறவே ஒத்துக்கொள்ள முடியாது என்றும் செந்தில் காரசாரமாகப் பேசினார். இந்த நிலையில்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பெரும்பாலான காமெடி நடிகர்கள் சேர்ந்துவிட்டனர் . அதில் முக்கியமானவர் செந்தில். அவர் அமமுகவிற்காக தீவிரமாக களமாடி வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அமமுக மாரியப்பன் கென்னடியை ஆதரித்து, நடிகர் செந்தில் தீவிர பிரசாரம் நடத்தி வந்தார்.