அதிமுக முன்னாள் எம்பியின் மனைவி, பாஜக பிரமுகர் கொலை

அதிமுக முன்னாள் எம்பியின் மனைவி, பாஜக பிரமுகர் கொலை

1 mins read

சென்னை: அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குழந்தை வேலுவின் மனைவியான ரத்தினம் என்பவர் சென்னையில் அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டதை அடுத்து உடலை போலிஸ் மீட்டது. சொத்து பிரச்சினை தொடர்பில் ரத்தினத்தின் புதல்வரே தாயைக் கொன்று இருக்கலாம் என்ற சந் தேகம் கிளம்பி இருப்பதால் பிரவீன் என்ற இங்கிலாந்து குடி யுரிமை பெற்ற அந்த இளைஞரை போலிஸ் தேடுகிறது. இதற்கிடையே நாகப்பட்டினம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரத்தில் உள்ள ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலி சுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று உடலை போலிஸ் மீட்டது. திருப்பூண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. செந்தில்குமார் நாகை மாவட்ட பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். போலிஸ் விசாரணை நடக்கிறது.