பார்வையற்றவர் வாக்களிக்க வசதி

பார்வையற்றவர் வாக்களிக்க வசதி

1 mins read

வாக்குப்பதிவு இயந்திரங் களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி எண்களைக் குழப்பமின்றி பயன்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் பரிசோதித்துப் பார்த்த ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆணையம், இத்தேர்தலில் நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மாற்றத்தின்படி இயந்திரம்- 1, இயந்திரம்- 2, இயந்திரம்- 3 என இயந்திரங்களின் தலைப்பகுதியில் பிரெய்லி முறை யில் எண்கள் ஒட்டப்படும். வேட்பாளர் பட்டியலை பிரெய்லி முறையில் தயாரிக்கும்போது, இயந்திரம் 1-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனியாகவும் இயந்திரம்-2 மற்றும் 3-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனித்தனியாகவும் இருக்கும்.