கவுகாத்தி: நாடு முழுவதும் இளையர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை யில் நாட்டின் பல்வேறு கலாச்சாரம், மதங்களுக்கு இடம் அளிக்கப்பட வில்லை என்றும் அரசமைப்பு சாசனத்துக்கு மதிப்பு அளிக்கப்பட வில்லை என்றும் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டடார். அரசமைப்பு சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் அவர் சாடினார். "காங்கிரசின் தேர்தல் அறிக் கையில் ஒவ்வொரு வார்த்தையும் இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. காங்கி ரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். "பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு செல்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை ஆரத் தழுவுகிறார். ஜப்பானில் டிரம்ஸ் இசைக்கிறார். ஆனால் சொந்த தொகுதியான வாரணாசிக்காக அவர் ஐந்து நிமிடங்கள் கூட ஒதுக்குவதில்லை. அந்த தொகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் குறித்து அவருக்கு துளியும் அக்கறை இல்லை," என்றார் பிரியங்கா. தற்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் துய ரத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜப்பானில் டிரம்ஸ் இசைக்கும் மோடிக்கு தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை என பிரியங்கா காந்தி சாடல்
1 mins read

