மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் மர்மப் பெட்டி: விசாரிக்க கோரிக்கை

மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் மர்மப் பெட்டி: விசாரிக்க கோரிக்கை

1 mins read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தேர்தல் பிரசாரத் துக்காக பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு ஹெலி காப்டரில் சென்ற போது, கறுப்பு நிறப்பெட்டி ஒன்று கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கர்நாடகா சென்றடைந்ததும் அந்தப் பெட்டி பிரதமரின் பாதுகாப்புப் படையைச் சேராத ஒரு காரில் ஏற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். "இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். கர்நாடகா மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், காங்கிரஸ் சார்பில் காணொளி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று ஆனந்த் சர்மா வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் தெரிவித் துள்ள இந்த புகார் குறித்து பாஜக தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. எனினும் காங்கிரசின் இந்தக் கோரிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை கேட்டுப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.