நூறு இந்திய மீனவர்கள் விடுவிப்பு

நூறு இந்திய மீனவர்கள் விடுவிப்பு

1 mins read

புதுடெல்லி: பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நூறு பேரை அந்நாடு விடுவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த 7ஆம் தேதி இதேபோல் நூறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவும் நிலையில், அதை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்து இருந்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ரயில் மூலம் லாகூர் கொண்டு வரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.