கெஜ்ரிவால்: பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்

கெஜ்ரிவால்: பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்

1 mins read

புதுடெல்லி: பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான ஆம் ஆத்மியின் முயற்சிகள் தொடரும் என அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு தற்போது ஆபத்தில் உள்ளது என்றார். "பிரதமர் மோடியையும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க நாங்கள் எதுவும் செய்வோம். இதற் காக தீவிரமாக களப்பணியாற்றுவோம்," என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்தார்.