'ஜெட் ஏர்வேஸ்' தற்காலிகமாக மூடப்படலாம்

1 mins read
93f82a3d-16cc-42ac-b69c-aa340970e795
-

'ஜெட் ஏர்வேஸ்' விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அதன் நிறுவனர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது அந்த விமான நிறுவனத்தில் பத்துக்கும் குறைவான விமானங்கள் செயல்படுகின்றன. கடனை அடைப்பதற்கான நிதியை அந்நிறுவனம் தற்போது எதிர்பார்க்கிறது.

நிதி கிடைக்கும் வரை 'ஜெட் ஏர்வேஸ்' தற்காலிகமாக மூடப்படலாம் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக சபை செவ்வாய்க்கிழமை மும்பையில் நடத்திய சந்திப்பின்போது முடிவு செய்தது. விமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து திரு கோயல் கடந்த மாதம் விலகினார். அவரும் அவரது மனைவி அனிதா கோயலும் விமான நிறுவனத்தின் நிர்வாக சபையிலிருந்து கடந்த மாதம் வெளியேறினர்.