ரூபாய் மதிப்பு நிலையாக இருக்கும்: நிபுணர்கள்

சிங்கப்பூரின் ஒரு வெள்ளிக்கு ஒப்பான இந்திய ரூபாயின் மதிப்பு 51.414 ஆக உள்ளது. இது, ஒரு மாதத்திற்கு முன்னதாக 50.986 ஆக இருந்ததாக ‘யாஹூ ஃபைனான்ஸ்’ நிதியியல் தளம் குறிப்பிட்டது. ஜனவரி மாதத்தில் ஆசியாவில் ஆக பலவீனமான நாணயமாகக் கருதப்பட்ட இந்திய ரூபாய் மார்ச் மாதத்தில் ஆக வலுவான நாணயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்தபோதும் நீண்ட காலத்திற்கு நிலைத்தன்மையாக இருக்கும் என்று நாணய வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதாக ‘எக்ஸ்சேஞ் ரேட்ஸ். ஆர்க்’ இணையத்தளம் குறிப்பிடுகிறது.