ஃபேஸ்புக்கில் மோடி ஆகப் பிரபலமான தலைவர்

இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக வசவுகளைப் பொழிபவர்கள் பலர் இணையத்தில் உலாவி வந்தாலும் அங்கும் அவர் வாகை சூடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் திரு மோடிக்கு இதுவரை 43.5 மில்லியன் ‘லைக்’குகள் குவிந்துள்ளன. உலகத் தலைவர்கள் எவருக்கும் இதுவரை பெறாக லைக்குகளைப் பெற்ற பெருமை திரு மோடியைச் சேர்கிறது. அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு 23.8 மில்லியன் ‘லைக்’குகள் கிட்டின.

‘பர்சன் கொஹ்ன் அன்ட் வுல்ஃப்’ (BCW) என்ற அனைத்துலகத் தொடர்பு அமைப்பு இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 

16.9 மில்லியன் ‘லைக்’குகளைப் பெற்ற ஜோர்டானின் அரசி ரானியா மூன்றாவது நிலையை அடைந்திருக்கிறார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் 8.99 மில்லியன் ‘லைக்’குகளைப் பெற்று எட்டாவது நிலையில் இருக்கிறார்.