விருதுநகர்: யார் பக்கம் தொண்டர்கள் உள்ளனர், யார் பக்கம் குண்டர்கள் உள்ளனர் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23ஆம் தேதி தெரிந்துவிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்பதே டிடிவி தினகரனின் எண்ணம் என்றார். "சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரை பயன்படுத்தவே இல்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத் தோடு செயல்பட்டு வருகிறார். தன் கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார். "சசிகலா சிறைக் குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்தக் கட்சியாக இருந்தா லும், தான் தலைவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்," என்றார் ராஜேந்திர பாலாஜி. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல் வர் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார் எனில், மு.க.ஸ்டாலின் கூஜாவாக இருப்பார் என்று அவர் மேலும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தினகரனின் எண்ணம்: அமைச்சர் குற்றச்சாட்டு
1 mins read

