கிருஷ்ணகிரி: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கல்வித்துறை அதி காரியும், ஆசிரியர் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் . இருவரும் அமமுக வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தாகப் புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாகராஜ் கெலமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக உள்ளார். இவரும் காவேரிப்பட்ட ணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜெயப்பிரகாஷும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதர வாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படத் துடன் கூடிய ஆதாரம் மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதையடுத்து இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பிரசாரம் செய்த ஆசிரியர், அதிகாரி பணியிடை நீக்கம்
1 mins read

