கரூர்: நள்ளிரவு வேளையில் திமுகவினர் வீடு புகுந்து தமக்கு மிரட்டல் விடுத்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் தெரிவித்துள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கரூரில் அதிமுக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற் கொள்ள ஒரே இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கட்சிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், கரூர் காங் கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுறுத்தலின் பேரில், வழக் கறிஞர் செந்தில் என்பவர் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரு டன் தமது வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். "இறுதிக்கட்ட பிரசாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை எனது அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள் ளேயே நுழைய முயன்றனர். "இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து எங் களைப் பாதுகாத்தார். நடுநிலை யோடு பணியாற்றும் என்னை தடுப்பது எந்த விதத்தில் நியா யம்?" என்று ஆட்சியர் அன்பழ கன் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் திமுகவினர் ஞாயிற்றுக் கிழமை அன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத் திருந்ததாக குறிப்பிட்ட அவர், வேறு வழியின்றி தர்மசங்கடமான நிலையில் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த அலுவ லர் இறுதிக்கட்ட பிரசார அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். "மாவட்ட ஆட்சித்தலைவரான எனக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களுக்கு என்ன பாது காப்புள்ளது? எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்," என ஆட்சி யர் அன்பழகன் தெரிவித்தார்.
திமுகவினர் மிரட்டுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் புகார்
2 mins read
கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன். படம்: நீயூஸ்18 -

