1,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

1,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

1 mins read

விழுப்புரம்: மூன்று நாட்கள் டாஸ் மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டையில் ஆயிரக்கணக்கான மதுப்புட்டி களைப் பறிமுதல் செய்து, அவற் றை கடத்த முயன்ற நபர்களையும் போலிசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந் தூர்பேட்டை பகுதியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், அரசு மதுபானக்கடையில் மதுப் புட்டிகளை வாங்கி சாக்கு மூட்டையில் வைத்து கட்டிக்கொண் டிருந்தவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் மதுப் புட்டிகளைக் கடத்த முயல்வது தெரியவர அந்த நபர்களைக் போலிசார் கைது செய்தனர். தமிழகத்தில் நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகளுக்கு விடு முறை என்பதால் இந்த மது புட்டிகள் கள்ளச்சந்தையில் விற்பதற்காக வாங்கப்பட்டவையா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.