தேனி: தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது சாலிமரத்துப் பட்டி. இந்தக் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வாழத் தகுந்த சூழலை அரசு செய்து தராததால், தேர்தலை புறகணிப்ப தோடு, கிராமத்தைவிட்டு வெளியேறி மலைப்பகுதியில் குடியேறத் திட்டமிட்டுள்ளோம் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர். "இந்தக் கிராமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக சாக் கடை, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதி இல்லாததால் டெங்கி போன்ற தொற்று நோய் களின் தாக்கமும் அதிகம் உள்ளது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேறி மலைப் பகுதியில் குடியேறப் போகிறோம்," என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கிராமத்தை காலி செய்து, மலையில் குடியேறும் மக்கள்
1 mins read

