மூன்று நாள் விடுமுறை; மதுக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

மூன்று நாள் விடுமுறை; மதுக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

1 mins read
70cc410e-2693-4b64-a13a-82d59a29e149
புதுச்சேரி மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. படம்: தி இந்து -

சென்னை: நாளை 18ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான மதுப் பிரியர்கள் தமிழகம் எங்கும் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில் நிரம்பி வழிந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மூன்று தினங்களிலும் மது உற்பத்திக்கும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுவை கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையையும் மீறி மதுவைக் கடத்திச் சென்றோர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று வாக்கு எண் ணிக்கை நடைபெறும் மே 23ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.