தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறு கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 845 வேட்பாளர்களும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர் களும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தனர். கட்சிக் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகி யோரின் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்றது. தேர்தல் விதிமுறையின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. பிரசார ஓய்வு நாட்களில் அரசியல்வாதிகள் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. அதுமட்டுமல்ல அவர்கள் இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு ஊடகத்துக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது. புதுவை மாநிலத்தில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐந்துக்கும் மேற் பட்டோர் பொது இடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம் பரப் பதாகைகள், துண்டு பிரசுரங் கள், போன்றவற்றை வைத் திருக்கக்கூடாது.
தமிழகம்: தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு
1 mins read

