சிவகாசி: பொதுவாக மிகவும் நல்லவராக இருப்பவரை 'ஆயிரத் தில் ஒருவர்' என்று பாராட்டுவது உண்டு. இதுபோல் இப்போது சிவகாசியில் உள்ள ஒருவரையும் மக்கள் 'ஆயிரத்தில் ஒருவர்' என்று பாராட்டி புகழ்ந்து வருகின் றனர். சொந்தக் காசை செலவழித்து டீ குடித்தபடி கட்சிக்காக கடுமை யாகப் பிரசாரம் செய்த தொண் டர்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இன்றோ 'துட்டு' கொடுத்தால் மட்டுமே தொண்டர்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நிலை காணப்படுகிறது. ஆனால், துளியும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தனி ஒருவராகப் பிரசாரம் செய்துள்ளார் விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த சாக்ர டீஸ், 65. அதிமுகவின் தீவிர தொண்ட ரான இவர், தலையில் பொருத்திய ஒயர்லெஸ் மைக், சிறிய அளவு ஸ்பீக்கருடன் 'ஹைடெக்' மனித ராக நடந்தபடியே பேசுவது இவரது பாணி. இடை இடையே கட்சி, எம்ஜிஆர் பாடல்களும் ஒலிக்கும். காலையில் புறப்பட்டு இரவு வரை இவரது சேவை தொடர் கிறது. "நான் 15 ஆண்டுகளாக தேர்தல்களில் அதிமுகவுக்குப் பிரசாரம் செய்கிறேன். எனக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். யார் வேட்பாளர் என பார்க்கமாட்டேன். எப்போதும் நடை தான். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை உற்சாகப்படுத்து வார்,'' என்கிறார் உற்சாகமாக.
'ஆயிரத்தில் ஒருவர்' என்று மக்களால் புகழப்படும் சாக்ரடீஸ்
1 mins read
தலையில் பொருத்திய 'ஒயர்லெஸ் மைக்', சிறிய ஸ்பீக்கருடன் 'ஹை டெக்' மனிதராக நடந்தபடியே வாக்குகேட்ட சாக்ரடீஸ். படம்: ஊடகம் -

