சென்னை: தமிழகத்தில் தேர்த லில் போட்டியிடும் முக்கிய கட்சி களின் வேட்பாளர்கள், வாக்காளர் களுக்கு பணத்தை வாரி இறைத் துள்ளதால் தேர்தல் முடிவு எப்படி அமையுமோ என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்த அனைவரிட மும் வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டதால் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாமல் கட்சிகளும் களத்தில் நிற்கும் வேட்பாளர்களும் கட்சி நிர்வாகிகளும் குழப்பத்தில் தவிக்கின்றனர். சில தொகுதிகளில் அனை வருக்கும் பாரபட்சமின்றி பணம் வழங்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் ஏழை குடும்பத் தினர், சொந்தக் கட்சியினர் என 60% பேருக்கு மட்டும் பணம் வழங்கி உள்ளனர். அதிமுக, திமுக தலைமை யில் இரு கூட்டணிகளும் அம முக-எஸ்டிபிஐ கூட்டணியும் களத்தில் உள்ளன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன் றவை தனித்துப் போட்டியிடு கின்றன. மூன்று கட்சி மக்களும் பணம் வழங்கியுள்ள நிலையில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரி கிறது. தமிழகத்தில் இன்று நடக்க விருக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
எல்லாரிடமும் பணம்பெற்ற வாக்காளர்கள்; குழப்பத்தில் வேட்பாளர்கள்
1 mins read

