தருமபுரி: தருமபுரியில் மலைக் கிராமங்களுக்குச் சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதி காரிகள் நேற்றும் கழுதைகள் மூலமே கொண்டுசென்றனர். தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ளது வட்டுவனள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கோட்டூர்மலை, அளக் கட்டு, எரிமலை ஆகிய மலைக் கிராமங்களிலும் மொத்தம் உள்ள 672 வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக கோட்டூர்மலை, எரிமலை ஆகிய 2 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு செல்வதற்கு சாலை வசதிகள் இல்லாததால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் விவிபாட் இயந் திரங்களும் கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்பட்டன.
சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு அதிகாரிகள் கழுதையில் பயணம்
1 mins read

