புதுடெல்லி: பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இத்தகைய எண்ணத்துடன் காங்கிரசின் முக்கிய தலைவர் கள் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து திட்டம் தீட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "அண்மையில் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு காங்கிரசின் சூழ்ச்சியே காரணம். இப்படிச் செய்வதால் என்ன நடந்துவிடும் என்பதுதான் எங்களுக்குப் புரிபடவில்லை. காங்கிரசின் சூழ்ச்சியை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து கொள்வர். காங்கிரசின் எண்ணம் நிறைவேறாது," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். படம்: தகவல் ஊடகம்
காங்கிரஸ் கட்சி சூழ்ச்சி செய்வதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
1 mins read
-

