இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

1 mins read
92f2521b-57a9-47d4-8893-a896a8221b92
படம்: ஊடகம் -

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் அலுவலர்களுடன் சிறப்பு ஆலோசனை நடத்திய மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவின் போது கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மீண்டும் விவரித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கேமராவுடன் கூடிய மடிக்கணினி, அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் அப்பொருட்களுடன் வாக்குப் பதிவு மையத்துக்குப் புறப்பட்டுச் சென்ற காட்சி இது. படம்: தகவல் ஊடகம்.