கட்சிகளின் இணைய விளம்பரச் செலவு இரட்டிப்பாக உயர்வு

கட்சிகளின் இணைய விளம்பரச் செலவு இரட்டிப்பாக உயர்வு

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கத் துடன் களமிறங்கி உள்ள அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவிட்டு வருகின்றன. இம்முறை இணையம் வழி செய்யப்படும் விளம்பரங்க ளுக்கான செலவு கடந்த தேர்தலை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விவேக கைபேசி பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் இணையம் வழி விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அதனால் தான் விளம்பரச் செலவு இரட்டிப்பாகி உள்ளது என விளம்பரத்துறை நிபு ணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பல்வேறு இணைய, மின்னணுத் தளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களுக்காக ரூ.8.63 கோடி செலவிட்டுள்ளதாக கூகுள் நிறுவன விளம்பர அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "2019 பொதுத் தேர்தலில் பிரசாரத்துக்கான மொத்த விளம் பரச் செலவு ரூ.3 ஆயிரம் கோடி யாக உயர வாய்ப்புள்ளது. இதில் சமூக ஊடகம் மற்றும் பிற மின் னணுத் தளங்களுக்கான விளம் பரச் செலவு மட்டும் 500 கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது," என்கிறார் விளம்பரத்துறை நிபுண ரும், 'டென்ட்சு ஏஜிஸ் நெட்வொர்க்' என்ற நிறுவனத்தின் இந்தியாவுக் கான தலைமை நிர்வாக அதிகாரி யுமான ஆசிஷ் பாசின்.