வருமான வரித்துறை சோதனையால் பரபரப்பு

வருமான வரித்துறை சோதனையால் பரபரப்பு

1 mins read
06088782-f3d5-4622-9b8e-2096939eda5e
-
Google News Preferred Icon

ரூர்கேலா: தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறை யினர் மேற்கொண்டு வரும் அதிரடி சோதனை நடவடிக்கை களால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து வரு மான வரித்துறை தனது நடவடிக் கையை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திய ஹெலிகாப்டரும் கூட தேர்தல் பறக்கும் படையின ரின் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. ரூர்கேலா நகரில் இருந்து முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் புறப்பட இருந்த நிலையில், திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் முதல்வரின் கைப்பை, ஹெலிகாப்டர் ஆகியவற்றைச் சோதனையிட்ட னர். இதே போல் புதுவை மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வீட்டிலும் பறக்கும் படையினர் நேற்று காலை சோதனையிட்டனர். புதுவை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் விநி யோகிக்கப் படுவதாக எழுந்த புகா ரின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகி றது. சோதனையின் போது கைப் பற்றப்பட்ட பணம் அல்லது பொருட்கள் குறித்த தகவல்கள் எதுவும் நேற்று மாலை வரை வெளியாகவில்லை. இன்று வாக்குப்பதிவு நடை பெறும் நிலையில், சோதனை நட வடிக்கையால் பரபரப்பு நிலவியது.