இந்தியாவில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இந்தியாவில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

3 mins read

மக்களவைத் தேர்தலின் இரண் டாம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகு திகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மாலை 6 மணியுடன் நிறைவு அடைந்ததை அடுத்து வாக்குப் பதிவுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி களுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்து இருந்தது. இந்நிலையில், வேலூரில் நேற்று முன்தினம் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிழக்கு திரிபுரா தொகுதி வாக்குப்பதிவு இந்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதே சத்தில் எட்டு தொகுதிகள், அசாம், ஒடிசா, பீகார் மாநிலங் களில் தலா ஐந்து தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்குவங்கம் மாநிலங்களில் தலா மூன்று தொகுதிகள், ஜம்மு, காஷ்மீரில் இரு தொகுதிகள், மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நாடாளு மன்றத் தேர்தலில் 845 வேட்பாளர் களும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடு கின்றனர். தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றத்துக்கு உரியவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. அதோடு 30,000 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு, கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்புப் பணியில் 64,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவர்களுடன் 27,000 ரிசர்வ் காவல் படையினர், 14,000 ஊர்க்காவல் படையினர், 20,000 ஓய்வுபெற்ற ராணுவத்தி னரும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்தல் பணியில் 350,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் 150,300 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், 89,160 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 94,653 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட உள்ளன. தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து, வெளியூர்களைச் சேர்ந்த வர்கள் விதிமுறைகளை மீறி தங்கி இருக்கிறார்களா என விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்தந்த தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தொண்டர்கள், வேட்பா ளர்களைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் இருந்து பிரசா ரத்திற்கு வந்தவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சென்னை திருவல்லிக் கேணியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் இருப்பதால் அங்கு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று சோதனை மேற்கொண்டதுடன் பதிவேட்டில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அங்கு தங்கி யிருக்கும் நபருடன் ஒத்துப்போ கிறதா என்றும் அதிகாரிகள் சரி பார்த்தனர். சந்தேகப்படும்படியாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலை யத்தில் தெரிவிக்க வேண்டும் என்று விடுதிகளின் பொறுப் பாளர்களுக்குப் போலிசார் அறி வுறுத்தினர்.