'தேனி தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும்'

'தேனி தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும்'

1 mins read

சென்னை: மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கெனவே, அமலாக்கத் துறையை, சி.பி.ஐ.யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி மிரட்டி உருட்டி செய்து கொண்டிருக்கின்றார்களோ அதே அடிப்படையில்தான் இப்பொழுது தேர்தல் கமி‌ஷனையும் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது ஆண்டிப்பட்டி, தேனி தொகுதி தேர்தல்களை நிறுத்தவேண்டும் என்ற ஒரு செய்தி வந்து இருக்கின்றது. ஆனால், நியாயமாக தேனி என்றால் தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலைத் தான் நிறுத்த வேண்டும். ஏனென்றால் அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மகன் சார்பில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் வாக் காளர்களுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அவையெல்லாம் காணொளி களாகப் பதிவு செய்யப்பட்டு, பரவலாக ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றது. அதற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்றார் ஸ்டாலின்.