வாக்குக்குப் பணம் கேட்டு சாலை மறியல்

வாக்குக்குப் பணம் கேட்டு சாலை மறியல்

1 mins read

மேலசொக்கநாதபுரம்: தேனி நாடாளு­மன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ரவீந்­திர­நாத்குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனும், அ.ம.மு.க. சார்பில் தங்கதமிழ்ச் செல்வனும் களத்தில் உள்ளனர். இதனால் தேனி நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. வெற்றியை எட்டிப் பறிப்பதில் மூன்று கட்சி வேட் பாளர்களும் தீவிரமாகப் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போடி டவுன் 1வது வார்டு புதூர் பகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந் தவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது. பணம் பெற்றவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் தெரிவிக்கவே பணம் கிடைக்காத­வர்கள் போடி=குரங்கணி சாலை­யில் திடீர் சாலை மறியலில் ஈடு­பட்டனர். இது குறித்துத் தகவல் அறிந்ததும் போடி டவுன் காவல் துறை ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரிடம் ஒரு தரப்பினருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு எங்களுக்குப் பணம் தரவில்லை எனக் கூறினர். இதை கேட்டதும் அதிர்ச்சி­யடைந்த காவல்துறையினர் வாக்­குக்குப் பணம் வாங்குவது சட்டப்­படி குற்றமாகும். அதற்காக சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.