சென்னை: தேர்தலை முன்னிட்டு அரசு மதுக்கடைகளில் (டாஸ்மாக்) மூன்று நாட்களில் மட்டும் 422 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுக்க உள்ள அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு மதுக்கடைகளில் விடுமுறைக்கு முன்னதாக விற்பனை சூடுபிடித்துவிட்டது. ஏப்ரல் 12 முதல் 14 வரை வெறும் மூன்றே நாட்களில் நம்ப முடியாத அளவுக்குத் தமிழகம் முழுவதும் ரூ.422 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. மதுரை அரசு மதுபானக் கடை களில் அதிகபட்சமாக ரூ. 139 கோடிக்கு மதுவகைகள் விற்கப் பட்டுள்ளன. அடுத்து சென்னை யில் ரூ.136 கோடிக்கு விற்பனை யாகியுள்ளன. விடுமுறை நாட்க ளைச் சமாளிப்பதற்காக குடிகாரர் கள் சரக்குகளை வாங்கி குவிப் பதால் அரசு மதுக்கடைகளில் வருமானம் குவிகிறது. இதனிடையே தேர்தல் அறி விப்பு வெளியான நாள் முத லாகவே அரசு மதுக்கடைகளில் விற்பனை நன்றாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக் கின்றனர். இதன் எதிரொலியாக தமிழகத் தில் ஒட்டுமொத்தமாக 10 விழுக்காடு விற்பனை அதி கரித்துள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
அரசு மதுக் கடைகளில் மூன்றே நாட்களில் ரூ.422 கோடி விற்பனை
1 mins read

