ஜெட் நிறுவனத்தின் விமானப் பயணங்கள் தற்காலிக ரத்து

முடக்கத்தின் விளிம்பில் தத்தளிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான நிறுவனம் , தனது அனைத்துப் பயணங்களையும் ரத்து செய்துள்ளது. 

எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்குக் கட்டணம் செலுத்த இயலாத நிலையில் அந்நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் மீதான கடன் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலராக உள்ளது.

நிறுவனத்தின் நிதிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் பலனளிக்காத நிலையில் விமான நிறுவனம் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்ததாக ஜெட் ஏர்வேஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.