சிவகார்த்திகேயனுக்கும் ரோபோ சங்கருக்கும் (படம்) வாக்கு இல்லை

சிவகார்த்திகேயனுக்கும் ரோபோ சங்கருக்கும் (படம்) வாக்கு இல்லை

1 mins read
cf9bc61d-438a-43d7-a8a1-2333c6847c24
சிவகார்த்திகேயன்,  ரோபோ சங்கர். படம்: இணையம் -

சென்னை: நடிகர் சிவகார்த்தி கேயனுக்கும் துணை நடிகர் ரோபோ சங்க ருக்கும் (படம்) வாக்கு இல்லை என்பது தெரியவந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக இருந்தது. ஆனால், அங்குள்ள வாக்குச் சாவடி 303ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு வாக்கு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக் காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்கவில்லை. இதேபோல், சென்னை சாலி கிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் வாக்களிப்பதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் காத்திருந்தார். ஆனால் அவரது பெயரும் பட்டியலில் இல்லாததால் அவராலும் வாக்களிக்க முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டிய லில் பெயரில்லாத காரணத் தினால் தங்களால் வாக்க ளிக்க முடியவில்லை என இவர்களைப் போலவே வேறு சிலரும் விரக்தி அடைந்தனர். வடசென்னை நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராமன் தெருவில் உள்ள வாக்கு மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத வாக் காளர்கள் வாக்கு மையத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.