வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்

வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்

1 mins read

நெல்லை: தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப் பட்ட பாபநாசினி ஆற்றில் நீராடி வழிபட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (படம்). நேற்று முன்தினம் தாம் போட்டியிடும் வயநாடு தொகு திக்கு வந்த அவர், பின்னர் திருநெல்வேலியில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தார். முன்னதாக பாபநாசினி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தார். மேலும் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் அவர் முறைப்படி உரிய சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அஸ்தி பாப நாசினி ஆற்றில் கரைக்கப்பட் டது. அதன்பின்னர் சில முறை இங்கு வருவதற்கு ராகுல் திட்ட மிட்டார். எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் இந்த எண்ணம் ஈடேற வில்லை.