பெங்களூரு: தேர்தல் களத்தில் தன்னைப் பற்றி தவறான தகவல்களைக் காங்கிரஸ் கட்சி பரப்பி வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இம்முறை பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் ரிஸ்வானுடன் எடுத்த புகைப்படத்தை அவரது உதவியாளர் அகமது என்பவர் சமூக வலைத்தளங்களில் பரப்பி, தாம் காங்கிரசை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்து வதாக தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.
காங்கிரஸ் மீது பிரபல நடிகர் புகார்
1 mins read

