திருச்சி: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நடந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொன் பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக் குப்பதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ள தாகவும் அவர் கூறினார். இதனிடையே, பொன்பரப்பியில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பில் 25 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. பொன்பரப்பியில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே திருமா கட் சியின் பானை சின்னத்தைப் பாம கவைச் சேர்ந்த சிலர் உடைத்ததை அடுத்து பிரச்சினை மூண்டது. தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட இருதரப்பு வன்செயல்களில் பலர் காயம் அடைந்தனர். வீடுகள் சேத மடைந்தன.
பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடக்க திருமா விருப்பம்
1 mins read
-

