சென்னை: தமிழகத்தில் நடந்த 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். அதேவேளையில், 18 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 75.57% வாக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது முடிந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தேர்தல் அதி காரி, அதிகபட்சமாக தர்மபுரியில் 85.49% வாக்குகள் பதிவானதாக வும் குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவானதாகவும் கூறினார். இடைத்தேர்தலில் அதிகபட்ச மாக சோளிங்கர் தொகுதியில் 82.26% வாக்குகளும் குறைந்த பட்சமாக பெரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மக்களவை 71.87%; சட்டசபை 75.57% வாக்குப்பதிவானது
1 mins read

