அமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது

அமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது

1 mins read
d7eeada2-e0bc-4ebd-98a0-a8389d81a4f5
-

சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் புதிய கட்சியாக உருமாறுகிறது. அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பு ஏற்கிறார் என்பது உறுதி யாகி இருக்கிறது. அண்மையில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமமுகவுக்குப் பொதுவான சின் னத்தை ஒதுக்கும்படி அந்தக் கட்சியின் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போகிறோம் என்று தினகரன் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறை வேற்றும் வகையில் அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது என்று கூறப்படுகிறது. ஓர் அமைப்பாக செயல்பட்டு வரும் அமமுகவின் பொதுச் செய லாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் இருக்கிறார்கள். அமமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் அமமுக வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ள தேர்தலில் அமமுக பரிசுப் பெட்டகச் சின்னத்தில் சுயேச் சையாகப் போட்டியிட்டது.