தேர்தல்: சமூக ஊடகத்தில் வலம் வந்த சுந்தர் பிச்சை

தேர்தல்: சமூக ஊடகத்தில் வலம் வந்த சுந்தர் பிச்சை

2 mins read
36bb04bb-f413-4201-809c-89e5e8a36420
-

சென்னை: இந்தியாவில் நாடாளு மன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தமிழகத்தில் நடந்தபோது பிரபலங்களும் பெரும் புள்ளிகளும் வாக்களித்ததைக் காட்டும் பல படங்கள் சமூக ஊட கங்களில் எடுப்பாக வலம் வந்தன. அத்தகைய படங்களில் ஒரு படம் கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சிலருடன் இருப் பதைக் காட்டியது. வாக்களிப்பதற்காக அமெரிக் காவிலிருந்து சுந்தர் பிச்சை தமிழ்நாடு வந்திருக்கிறார் என்று அந்தப் படத்தின் விளக்கம் தெரி வித்தது. அந்தப் படத்தைப் பார்த்த பல ருக்கும் தீபாவளியன்று வெளியான 'சர்கார்' படம் நினைவுக்கு வந்திருக்கும். அந்தப் படத்தின் கதாநாயகனான விஜய், அமெ ரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வாக்களிக்க வரும் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்தக் கதாபாத்திரம் கூகல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி யான சுந்தர் பிச்சையை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சுந்தர் பிச்சையின் படம் வெளியாகி இருந்தாலும் உண்மையிலேயே சுந்தர் பிச்சை தமிழ்நாட்டுக்கு வரவும் இல்லை. அவர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவும் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்க குடிமகன். அவர் இந்தியாவில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு என்பது குடிமகன் ஒவ்வொருவரின் கடமை என்ற செய்தியை சுந்தர் பிச்சை படத்துடன் வெளியிட்டால் வாக்க ளிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்களிடம் ஏற்படும் என்ற நோக்கத்துடன் சுந்தர் பிச்சை படம் வெளியிடப்பட்டு இருக்கக் கூடும். என்றாலும் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் இருந்து வரவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை என்பதே உண்மை.