பிரதமர் மோடி: நான் இப்போதும் ஒரு சவால்தான்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னை இன்னமும் சவால்மிக்க  போட்டி யாளராகவே தான் கருதுவதாக தெரி வித்து இருக்கிறார். 2014ஐ போலவே இப்போதைய தேர்தலிலும் மக்கள் தமக்கு பெரும் ஆதரவைத் தருவார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார். 
ஊழல், வாரிசு அரசியல், பயங்கர வாதத்தை ஒழிக்க தொடர்ந்து தான் கடப் பாடு கொண்டிருப்பதாக மோடி கூறினார். 
ஜிஎஸ்டி வரி, பண மதிப்பிழப்பு நட வடிக்கை எல்லாம் பொருளியலைச் செம்மையாக திருத்தி அமைக்க இடம் பெற்றவை என்று குறிப்பிட்ட மோடி, அத்தகைய பெரிய அளவிலான முயற்சி கள் நடப்புக்கு வரும்போது பொருளியலில் தற்காலிக பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றும் தெரிவித்தார். 
நாட்டின் உண்மையான பிரச்சினைகளி லிருந்து மக்களைத் திசை திருப்பும் வகை யில் தேசியவாதத்தைப் பாஜக கையில் எடுத்து இருக்கிறது என்று எதிர்க்கட்சி கள் கூறுவதை திரு மோடி மறுத்தார். 
“நாட்டின் முன்னேற்றம் தொடர்பாகத் தான் நான் அதிகமாக உரையாற்றுகிறேன். ஆனால் அவை எல்லாம் முக்கிய இடம் பெறுவதில்லை. பயங்கரவாதமும் படைவீரர் கள் மரணமும் நாடு எதிர்நோக்கும் உண் மையான பிரச்சினைகளில் அடங்காதா?,” என்று மோடி (வலது-கோப்புப்படம்) கேள்வி எழுப்பினார். 
மீண்டும் பிரதமராகத் தேர்ந்து எடுக் கப்பட்டால் வித்தியாசமான முறையில் என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, இது பற்றி மே 23க்குப் பிறகு பேசுவதே நல்லதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். 
ஊழல் ஒழிப்பில் தான் மெத்தனமாக இருக்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேர்வழிகள் எல்லாரும் சிறைக்குப் போவதை நீங்கள் பார்க்கலாம்,” என்று தெரிவித்தார்.