புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தவறான பொத்தானை அழுத்தி தவறான கட்சிக்கு வாக்களித்து விட்டார். இதனால் மனமுடைந்த அவர் தனது கைவிரல்களை வெட்டிக்கொண்டார். இந்திய பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அப்போது புலந்ஷார் வாக்குச்சாவடியில் மாநில கட்சி யான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பவன்குமார் வாக்களிக்க விரும்பினார். ஆனால் தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துவிட்டார். வாக்களிப்பு இயந்திரத்தில் ஒட்டப்பட்டிருந்த கட்சி சின்னத் தின் மீது குழப்பம் ஏற்பட்டதால் தவறாக வாக்களித்துவிட்டதாக அவர் கூறினார். "யானை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பினேன். ஆனால் தவறுதலாக தாமரைக்கு வாக்களித்துவிட்டேன்," என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் காணொளியில் பவன் குமார் கூறியுள்ளார். யானை சின்னத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் தாமரை சின்னத் தில் பாரதிய ஜனதாவும் போட்டி யிடுகின்றன.
தவறான வாக்களிப்பு: விரலை வெட்டிக்கொண்ட வாக்காளர்
1 mins read
-

