ராகுல்: மோடி தோல்வி அடைவார்

புஜ்: குஜராத் மாநிலத்தில் புஜ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு ஆதரவாக அலை வீசுவதாகவும் பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். “காங்கிரஸ் அறிவித்த ‘நியாய’ திட்டத்தால் மோடி ஆட்டம் கண்டுள்ளார். நான் சென்ற இடமெல்லாம் காங்கிரசுக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு தோல்வி ஏற்படப் போகிறது,” என்று ராகுல் கூறினார்.