ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏர் இந்தியா

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுத்து சிறப்புக் கட்டணங்களில் விமானச் சேவைகளை வழங்குவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. முதற் கட்டமாக ஜெட் ஏர்வேசின் ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க அது உத்தேசித்துள்ளது.
இது பற்றி பேசிய ஏர் இந்தியா வின் தலைவரும் நிர்வாக இயக்கு நருமான அஷ்வானி லோஹானி, “தேசிய விமான நிறுவனமாக ஏர்  இந்தியாவுக்கு பொறுப்பு உள்ளது,” என்றார்.
மேலும் பேசிய அவர், ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்கிய பாதை களில் சில ‘பி777’ விமானங்களை இயக்கும் சாத்தியம் குறித்து பரி சீலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
உலக அளவில் பிரபலமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறு வனம் சில நாட்களுக்கு முன்பு அனைத்து சேவைகளையும் நிறுத் தியது. அந்த விமான நிறுவனத் தின் விமானிகள், ஊழியர்களுக்கு இன்னமும் சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐந்து போயிங்- 777 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விமானங்கள் மூலம் லண்டன், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சேவை வழங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள் ளது. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அந்த விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக விமானச் சேவைகளை படிப்படி யாகக் குறைத்து வந்த ஜெட் ஏர்வேஸ் உள்ளூர், அனைத்துலக சேவை அனைத்தையும் நிறுத்து வதாக புதன்கிழமை அறிவித்தது.
இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 17,000 ஊழியர்கள் நேரடியாகவும் சுமார் 5,000 ஊழி யர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.