பெங்களூரு: தான் மீண்டும் அர சியலுக்கு வர நேர்ந்த காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி யின் தலைவரும் முன்னாள் பிரத மருமான தேவேகவுடா. தும்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜை எதிர்த்துப் போட்டியிட்ட இவர், "அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன். "ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசியலில் தொடர வேண்டியதாகிவிட்டது. "இந்தத் தேர்தலில்கூட நான் போட்டியிட விரும்பாமல் ஹாசன் தொகுதியை எனது பேரனுக்கு விட்டுக்கொடுத்தேன். கட்சியினர் கேட்டுக்கொண்டதால் தும்கூரு வில் போட்டியிடுகிறேன். "பாஜக மூத்த தலைவர் அத்வானியைப் போல அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். "உயிருள்ளவரைக் கட்சியை வளர்க்க போராடுவேன். விரை வில் கட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என முடிவெடுத்திருக் கிறேன். "அரசியலில் எந்தப் பதவியை யும் அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. குமார சாமி விருப்பப்படுவதைப் போல மீண்டும் பிரதமராக எனக்கு விருப்பம் இல்லை. "எங்கே மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பது தான் என் கவலை. இதைப் பிரதமரின் முகத்தைப் பார்த்துச் சொல்லும் அளவுக்கு எனக்குத் தைரியம் உள்ளது. "ஆனால், ராகுல் காந்தி பிரத மராக வந்தால் நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன். "சிறிய கட்சியாக இருந்த போதும் சோனியா காந்தி எங் களை ஆதரித்துக் கர்நாடகாவில் மஜத ஆட்சி அமைக்க உதவி னார். அதற்கு நன்றிக்கடனாக ராகுல் காந்தி பிரதமராக உதவு வேன். "மாநில கட்சிகளின் பங்களிப் புடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது," என்று தெரிவித்தார். கடந்த 18ஆம் தேதி நடை பெற்ற இரண்டாம் கட்ட நாடாளு மன்றத் தேர்தலின்போது கர்நாட காவும் வாக்களித்தது.
தேவகவுடா: மீண்டும் மோடி பிரதமராகி விடுவாரோ என்பதுதான் என் கவலை
2 mins read
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா. PTI File photo -

