570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

1 mins read

புதுடெல்லி: இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 115 தொகுதிகளில் நாளை மறுநாள் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 1,612 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 570 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 40 பேர் மீதும் பாஜகவின் 38 வேட்பாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் கூறியுள்ளது.