சுடச் சுடச் செய்திகள்

முத்தமிட்டபோது ஆற்றுக்குள் விழுந்த புதுமண தம்பதி

திருவனந்தபுரம்: திருமண நிகழ் வின் ஒரு பகுதியாக திரைப்பட பாணியில் புகைப்படம் எடுக்க முயன்ற புதுமணத் தம்பதி ஆற்றுக் குள் விழுந்த காணொளி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேரளாவின் திருவல்லாவைச் சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனா சேரியைச் சேர்ந்த ‌ஷில்பாவுக்கும் வரும் மே 6ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கடம்மன்னிட்டா பகுதியில் பம்பை நதியில் புதுமண ஜோடியைப் படகில் அமர வைத்து வித்தியாச மாக காணொளி, புகைப்படங்கள் எடுக்க ‘வெட்டிங் ஸ்டூடியோ’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது புதுமண ஜோடி முத்தமிட நெருங்கியபோது எதிர் பாராதவிதமாகப் படகு கவிழ்ந்தது. புதுமண ஜோடி ஆற்றில் விழுந்து தத்தளித்தது. புகைப்படக் குழுவி னர் அவர்களை மீட்ட னர். ஆனால் புகைப்பட குழுவினரோ இது விபத்தல்ல, திட்டமிட்ட ஒன்றுதான் என்று கூறியுள்ளனர்.
இந்தக் காணொளி நகைச்சுவையாக இருக்கிறது எனச் சிலரும் விபரீத விளை யாட்டு எனச் சிலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள னர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon