அபுதாபியில் முதல் இந்து கோயில்

துபாய்: அபுதாபியில் முதல் இந்துக் கோவிலைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.அபிதாபி=துபாய் நெடுஞ்சாலை அருகே இக்கோயிலைக் கட்ட 14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் 7 கோபுரங்களைக் கொண்ட மிகப்பெரிய கோயிலை கட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு முன்வந்தது. உலகம் முழுவதும் சுமார் 1200 கோயில்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆன்மீக வழிப்பாட்டு மன்றங்களை இந்த அமைப்பு நிறுவி, பராமரித்து வருகிறது.இந்நிலையில், இந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.