'பாஜக சீர்குலைத்த பொருளியலை காங்கிரசின் திட்டம் சீர்படுத்தும்'

'பாஜக சீர்குலைத்த பொருளியலை காங்கிரசின் திட்டம் சீர்படுத்தும்'

2 mins read
e6d1d324-f16a-4146-8fba-a09b6d0d9a3e
-

காந்தி நகர்: மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பஜிபுரா பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் வேட் பாளர் துஷார் சவுத்ரிக்கு அவர் வாக்குச் சேகரித்தார். தனது பிரசார உரையில், "பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளியல் பாதிக்கப்பட்டது. "அந்தப் பாதிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியின் 'நியாய்' திட்டம் பொருளியலை மீட்டெடுத்து நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 'நியாய்' திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று நாங்கள் உறுதி அளித்திருக்கி றோம். காங்கிரஸ் கட்சியில் உள்ள பொருளியல் நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினேன். "ஏழைகளுக்கு எவ்வளவு பணம் தரமுடியும் என்று கேட்டேன். அவர்கள் நன்கு ஆய்வு செய்த பிறகு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் என்று கூறினர். அதன் பிறகு தான் 'நியாய்' திட் டத்தை காங்கிரஸ் அறிவித்தது. "பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஏழைகளுக்கு ரூ.15 லட் சம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். ஆனால், நியாய் திட்டத்தின் கீழ்க் கணக்கிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ரூ. 3.60 லட்சத்தை நாங்கள் தருவோம். "பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்ட பிறகு பொரு ளியல் பாதிக்கப்பட்டது. மக்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்தி விட்டனர். "இதனால் நாட்டில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. "எனினும், எங்களுடைய நியாய் திட்டம் பொருளியலை மறு சீரமைக்கும். நிறுவனங்கள் மீண் டும் திறக்கப்படும்," என்று ராகுல் பேசினார். வேட்புமனு பரிசீலனை தாமதம் இதற்கிடையே, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர் பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டுத் தேர்தலில் எப்படி போட்டியிடலாம் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை வரும் 22ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் மே 6ஆம் தேதியும் ராகுல் போட்டியிடும் இன்னோர் தொகுதியான கேரளாவின் வயநாட்டில் நாளை மறுநாளும் வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது.