சுடச் சுடச் செய்திகள்

மீண்டும் புல்வாமா தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதல் போன்று இன்னோர் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத் தில் கடந்த 14ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களைக் குறிவைத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பி னர் தாக்குதல் நடத்தினர். 
வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார் சைக்கிளை வாகனங் களின் மீது மோதி அவர்கள் வெடிக்க வைத்தனர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந் தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோரம் இருந்த தீவிரவாதி கள் முகாமை இந்திய விமானப் படை குண்டுவீசி அழித்தது.
இந்நிலையில் பல்வேறு கட்டங் களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது புல்வாமா போன்ற மேலும் ஒரு தாக்குதலை நடத்த  தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு  பலப்படுத் தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்கள் எந்த வொரு இலக்கையும் அடை வது மிகவும்  எளிதானது என்று கூறப்படும் நிலையில், உளவுத் துறை அமைப்புகள் பாதுகாப்புப் படைகளுடன் தீவிரவாத எச்சரிக் கையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. எந்தவித அசம்பாவித  சம்பவத்தை யும் தவிர்ப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தி யுள்ளளது. இதற்கிடையே, ஹை தராபாத்தில் உள்ள கிங்ஸ் கால னியில் தீவிர வாதிகள் நடமாட்டம் இருப்பதாக என்ஐஏவிற்குத் தகவல் கிடைத் தது.
அதன் அடிப்படையில் கிங்ஸ் காலனிக்குச் சென்ற என்ஐஏ அதி காரிகள் அங்குள்ள 8 வீடுகளில் சோதனை நடத்தினர். இது அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யது. 
சோதனை குறித்து பாதுகாப்பு படையினர் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon